இந்தியா

இந்தியா - சீனா இடையே விரைவில் 9-ஆம் கட்ட பேச்சுவார்த்தை

23rd Jan 2021 12:25 PM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியா - சீனா இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 9-ஆம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. 

இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் இடையே பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியாக கடந்த நவம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், ராணுவ தளபதிகள் இடையிலான சந்திப்பு இன்னும் ஒரு சில நாள்களில் நடைபெறும் என்றும் இந்த சந்திப்பின் மூலம், எல்லைப் பகுதியில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது மத்திய வெளியுறவு விவகாரத் துறை சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்தியா - சீனா இடையேயான 8-வது பேச்சுவார்த்தை 2020-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Tags : india china ladakh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT