இந்தியா

ஜார்க்கண்டில் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி

23rd Jan 2021 11:32 AM

ADVERTISEMENT

 

ஜார்க்கண்டின் கோடெர்மா மாவட்டத்தில் சட்டவிரோத மைக்கா சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

வியாழக்கிழமை மாலை சட்டவிரோத சுரங்கத்தின் மேற்கூரை செதுக்கப்பட்டபோது 6 பேர் சிக்கியுள்ளதாக கோடெர்மா துணை ஆணையர் ரமேஷ் கோலாப் தெரிவித்துள்ளார். 

சட்டவிரோத மைக்கா சுரங்கம் மாவட்டத்தில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. இதையடுத்து, இரவு இரண்டு பேரை உள்ளூர் கிராமவாசிகள் மீட்டனர். ஒரு பெண் உள்பட நான்கு பேரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை இடிபாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கோடெர்மா காவல்துறை கண்காணிப்பாளர் எத்தேஷம் வகரிப் கூறுகையில், 

சட்டவிரோத சுரங்கம் இடிந்ததில் ஆறு பேர்  சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், சட்டவிரோத சுரங்கத்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாம் மியான் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக விரைவில் ஒரு பிரசாரம் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

வன அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், 

கோடெர்மா காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

Tags : collapses
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT