இந்தியா

அசாம்: நிலமற்றவர்களுக்கு 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை வழங்கினார் மோடி

23rd Jan 2021 01:28 PM

ADVERTISEMENT

அசாம் மாநிலம் சிவசாகரில் நிலமற்ற ஏழை மக்களுக்கு 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

2016-ல் அசாமில் 5.75 லட்சம் நிலமற்ற குடும்பங்கள் இருந்த நிலையில் அவற்றில் 2.28 லட்சம் குடும்பங்களுக்கு நிலப் பட்டா ஒதுக்கீட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து அசாமில் இன்று (ஜன. 23) 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை நிலமற்ற மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : நரேந்திர மோடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT