இந்தியா

இறந்தவரின் உயிரணுவைப் பெற தந்தைக்கு உரிமையில்லை:  கல்கத்தா நீதிமன்றம்

22nd Jan 2021 04:01 PM

ADVERTISEMENT


கொல்கத்தா: உயிரிழந்த தனது மகனின் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உயிரணுவைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை கல்கத்தா நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஒருவரது உயிரணுவைப் பெற அவருக்கு அடுத்தபடியாக அவரது மனைவிக்கே உரிமை இருப்பதாக கல்கத்தா நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்த தனது மகனின் உயிரணுக்களை பெற்றுக் கொள்ள, அவரது மனைவி, 'அனுமதிக் கடிதம்'  அல்லது பதிலளிக்க உத்தரவிடக் கோரி, மனுதாரர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திருமணமான அந்த நபரின் உயிரணுக்கள் தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நபரின் உயிரணுக்களைப் பெற்றுக் கொள்ள அவருக்கு அடுத்தபடியாக அவரது மனைவிக்கே உரிமை உள்ளது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

ADVERTISEMENT

மேலும், தந்தை - மகன் உறவு என்பது மகனின் சந்ததியினரை உருவாக்குவதற்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரின் மனுவில், தனது மகனுக்கு தலஸீமா நோய் தாக்கியிருந்ததால், எதிர்காலத்தில் உதவும் என்பதற்காக தில்லி மருத்துவமனையில் அவரது உயிரணுவை சேமித்து வைத்திருந்ததாகவும், மகன் உயிரிழந்த நிலையில், உயிரணுவைப் பெற அந்த மருத்துவமனையை நாடியபோது, மனைவியின் அனுமதிக் கடிதத்தைப் பெற்று வரக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மகனின் மனைவியிடம், அனுமதிக் கடிதம் கேட்ட போது, அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

Tags : high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT