இந்தியா

குவாரி வெடி விபத்து: விரிவான விசாரணைக்கு ராகுல் வலியுறுத்தல்

22nd Jan 2021 11:32 AM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிவ்மோகா மாவட்டத்தின் ஹுனசோடு பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகள் உடைக்கும் இடத்தில் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியது.  

இதையும் படிக்கலாமே: கர்நாடக கல் குவாரியில் வெடி விபத்து: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

இந்த விபத்தில் இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக  விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விரிவான விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவதன் மூலமே எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags : ராகுல் காந்தி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT