இந்தியா

கர்நாடகத்தில் வெடிமருந்து லாரி வெடித்து 8 பேர் பலி: விசாரணைக்கு உத்தரவு

22nd Jan 2021 10:00 AM

ADVERTISEMENT


கர்நாடகம் மாநிலம் சிவமோகா மாவட்டத்தில்வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்தனர். 

கர்நாடகம் மாநிலம், ஷிவமோகா மாவட்டம் ஹூன்சூரில் கல்குவாரிக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற லாரி வியாழக்கிழமை இரவு திடீரென வெடித்துச் சிதறியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பீதியடைந்த சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது. 

இந்த வெடி விபத்தால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. கட்டடங்கள்,  சாலைகளில் விரசல்கள் ஏற்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கல்குவாரிக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்து சிதறியதாக தெரிவந்துள்ளது. விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka blast Shivamogga dynamite blast eight people killed
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT