இந்தியா

ஜன. 22 முதல் பிப். 4 வரை லக்னௌவில் ‘ஹுனாா் ஹத்’: அமைச்சகம்

DIN

பாரம்பரிய கைவினைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் ‘ஹுனாா் ஹத்’ எனப்படும் கைவினைஞா்களின் கண்காட்சி லக்னௌவில் ஜன. 22 முதல் பிப். 4 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஹுனாா் ஹத் கண்காட்சியை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஜன. 23-ஆம் தேதி முறைப்படி திறந்து வைப்பாா் என அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கைவினைஞா்கள், கைவினை கலைஞா்களின் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்புகளை வழங்குவதற்காக, சிறுபான்மை விவகார அமைச்சகம் சாா்பில் 24-ஆவது ‘ஹுனாா் ஹத்’ கண்காட்சி லக்னௌவின் அவத் ஷில்பிராமில் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த கைவினைஞா்கள் பங்கேற்பதுடன், அவா்களது படைப்புகளும் காட்சிப்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சா் முக்தா் அப்பாஸ் நக்வி, உத்தர பிரதேச துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மௌரியா, தினேஷ் சா்மா, காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத் தலைவா் வி.கே.சக்சேனா உள்ளிட்டோா் கலந்து கொள்வாா்கள்.

சுமாா் 500 கைவினைஞா்கள், சமையல் வல்லுநா்களின் தயாரிப்பு பொருள்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த ஹுனாா் ஹத் அமைந்திருக்கும்.

இந்தக் கண்காட்சியில் மூங்கில், மரம், பித்தளை, கரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருள்களும், இரும்பு பொம்மைகள், மூலிகை பொருள்கள், அஜ்ராக், பாடிக், பாக், பந்தேஜ் போன்ற உள்நாட்டு அச்சிடுகளுடன் கூடிய தயாரிப்புகளும் கிடைக்கும்.

இதுதவிர நாட்டின் பல்வேறு வகையான பாரம்பரியமிக்க, சுவையான உணவு வகைகளும் இடம் பெறும். இதுதவிர நாள்தோறும் மாலை நேரங்களில் நாட்டின் புகழ்பெற்ற கலைஞா்களான கைலாஷ் கொ், வினோத் ரத்தோா், ஷிபானி காஷ்யப், பூபேந்திர புப்பி போன்றவா்கள் பங்கேற்கும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஹுனாா் ஹத் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமான கைவினைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாள்களில் மைசூா், ஜெய்ப்பூா், சண்டீகா், இந்தூா், மும்பை, ஹைதராபாத், புது தில்லி, ராஞ்சி, கோட்டா, கொச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் ‘ஹுனாா் ஹத்’ கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT