இந்தியா

அமேஸானில் வரட்டியை வாங்கி சாப்பிட்டு, சுவை குறித்து அதிருப்தியை பதிவிட்ட வாடிக்கையாளர்

DIN


அமேஸானில் மாட்டுச் சாணத்தால் செய்யப்படும் வரட்டியை வாங்கி, அதை ஏதோ சாக்லெட், பிஸ்கெட் போல சாப்பிட்டுவிட்டு, சுவை குறித்த தனது அதிருப்தியை பதிவிட்டுள்ளார் ஒரு வாடிக்கையாளர்.

இன்று சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் வெளியான ஒரு ஸ்கிரீன்ஷாட் பலருக்கும் ஆச்சரியத்தையும், அருவருப்பையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

அமேஸான் பக்கத்தில் மாட்டுச் சாணத்தில் செய்யப்பட்ட வரட்டிக்கு, ஒரு வாடிக்கையாளர் பதிவிட்டிருக்கும் அதிருப்தி கருத்தின் ஸ்க்ரீன்ஷாட்தான் அது.

முன்பெல்லாம் வீட்டில் அடுப்பெரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த மாட்டுச் சாணத்தால் செய்யப்படும் வரட்டியைக் கொண்டு தற்போது பொதுவாக கோயில்களில் பொங்கல் வைப்பது மற்றும் இறுதிச் சடங்குகளில் தகனம் செய்ய மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

வரட்டியை, ஆன்மிகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே என்று அமேஸான் அதன் விவரக் குறிப்பில் பதிவிட்டிருப்பதை கவனிக்காமல், அதனை வாங்கிய வாடிக்கையாளர் சாப்பிட்டுவிட்டு, அதன் சுவை குறித்து கருத்தும் பதிவிட்டுள்ளார். அதில்,

வரட்டியை நான் சாப்பிட்ட போது, அதன் ருசி மிகவும் மோசமாக இருந்தது, இதில் புல் போன்றும், சேறு போன்ற ருசியும் இருந்தது. எனவே, அதன் ருசி மற்றும் மொறுமொறுப்புத் தன்மையில் நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையெல்லாம் தாண்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மற்றொரு விஷயம், வரட்டி குறித்து அமேஸான் தனது விவரக் குறிப்பில், இது 100 சதவூதம் சுத்தமானது, மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது, ஆன்மிகப் பயன்பாடுகளுக்கானது. முழு கவனத்துடன் இந்திய பசுமாடுகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது, முழுக்க முழுக்க கைகளால் செய்யப்படுகிறது. முற்றிலும் உலர்த்தப்பட்டு, முழுவதுமாக நன்று எரியும் வகையில் உள்ளது. சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும், பூச்சி புழுக்களை அண்ட விடாது. பயன்படுத்தவும், பாதுகாக்கவும் எளிது என்று நீண்ட நாள்களுக்கு சேமித்து வைக்கலாம் என்றும் தெளிவாக மிக நீண்ட விளக்க்ததை அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’

SCROLL FOR NEXT