இந்தியா

'அனைவருக்கும் வீடு' திட்டம்: உ.பி.யில் 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 2,691 கோடி விடுவிப்பு

DIN

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 2,691 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

'2022க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி' என்ற இலக்கிற்கு ஏற்ப, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புற, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு வீடு இல்லாதோருக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படுகிறது. 

கடந்த நவம்பர் 20, 2016 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 1.26 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 6.1 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 2,691 கோடி ரூபாய் நிதியை புதன்கிழமை பிரதமர் மோடி விடுவித்தார். இதுதொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக கலந்துகொண்டார். மேலும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 5.30 லட்சம் பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 80,000 பயனாளிகளுக்கும் இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் சமவெளிப் பகுதிகளில் ரூ.1.20 லட்சமும், மலைப்பகுதிகளில், கிராமப்புறங்களில்  ரூ.1.30 லட்சமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT