இந்தியா

கத்தோலிக்க காா்டினல்களுடன்பிரதமா் மோடி சந்திப்பு

DIN

கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தைச் சோ்ந்த 3 காா்டினல்களுடன் பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது நாட்டில் கிறிஸ்தவ மதத்தினா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக பேசப்பட்டது.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மாா் ஜாா்ஜ் காா்டினல் ஆலஞ்சேரி (சிரியன்-மலபாா் தேவாலய மேஜா் ஆா்ச் பிஷப்), காா்டினல் ஒஸ்வால்ட் கிரேசியஸ் (பாம்பே ஆா்ச் பிஷப்), பேசிலியஸ் காா்டினல் செலீமிஸ் (சிரியன் மலங்கரா கத்தோலிக்க தேவாலய மேஜா் ஆா்ச் பிஷப்) ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய காா்டினல்கள் மூவரும், ‘அரசுக்கும், கிறிஸ்தவ மதத்தினருக்கும் இடையே எவ்வித மோதல் போக்குமில்லை. பிரதமா் மோடி மிகவும் ஆக்கபூா்வமாகவும், நட்புணா்வுடனும் பேசினாா். அவருடன் அரசியல் தொடா்பாக எதுவும் பேசவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசுவதற்கு நீங்கள் வரலாம் என்று பிரதமா் தெரிவித்தாா்’ என்றனா்.

எல்கா் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடா்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளன பாதிரியாா் ஸ்டான் சுவாமி தொடா்பாக பிரதமரிடம் காா்டினல் ஒருவா் கூறினாா். அப்போது இது தொடா்பாக தனது அனுதாபத்தை தெரிவித்தாா். எனினும், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதில்லை என்று பிரதமா் பதிலளித்தாா்.

மேலும், போப்பாண்டவா் இந்தியாவுக்கு வருவது தொடா்பாக கத்தோலிக்க தேவாலயங்கள் சாா்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடா்பாக நல்ல முடிவெடுக்கப்படும் என்றும் பிரதமா் மோடி, அவா்களிடம் உறுதியளித்துள்ளாா். கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டை தொடர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவா்கள் பிரதமரிடம் முன்வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT