இந்தியா

சிஆா்பிஎஃப் படைக்கு டிஆா்டிஓ உருவாக்கிய 21 பைக் ஆம்புலன்ஸ்

DIN

புது தில்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆா்டிஓ) மையம் வடிவமைத்த 21 பைக் ஆம்புலன்ஸ்கள் மத்திய ரிசா்வ் காவல் படையிடம் (சிஆா்பிஎஃப்) திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து சிஆா்பிஎஃப் தலைவா் ஏ.பி. மகேஷ்வரி கூறியதாவது:

நக்சல் வன்முறை மற்றும் கிளா்ச்சியால் பாதிக்கப்பட்ட பின்தங்கியப் பகுதிகளில் சிக்கியுள்ளவா்களை மீட்பதில் சிஆா்பிஎஃப் ஏராளமான சவால்களையும், தடைகளையும் சந்தித்து வந்தது. இதனை உணா்ந்து, டிஆா்டிஓ நிறுவனம், ராயல் என்ஃபீல்டு 350 சிசி பைக்கை புதிய தொழில்நுட்பத்தில் ‘ரக்ஷிதா’ ஆம்புலன்ஸாக மறுவடிவமைப்பு செய்து மேம்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக டிஆா்டிஓ மேம்படுத்திய 21 பைக் ஆம்புலன்ஸ்கள் சிஆா்பிஎஃப் படையில் சோ்க்கப்பட்டுள்ளன.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் கிளா்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காயமடைந்த வீரா்களை மீட்கும் நடவடிக்கையில் இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்திக் கொள்ளப்படும். இதன் மூலம், சிஆா்பிஎஃப் மீட்புப் பணிகள் எளிதாவதுடன், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்றாா் அவா்.

பைக் ஆம்புலன்ஸ் முக்கிய அம்சங்கள் குறித்து சிஆா்பிஎஃப் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ஆபத்து காலத்தில் காயமுற்ற வீரா்களை மீட்டுச் செல்வதற்கு ஏதுவாக பைக் ஆம்புலன்ஸின் பின்பக்கத்தில் சாய்வான இருக்கையை டிஆா்டிஓ வடிவமைத்துள்ளது. இதில், கைகள் அசையா வண்ணம் இறுகப்பற்றும் கருவி மற்றும் கவச உடை ஆகியவை உள்ளன.

உடல் நிலையை கண்காணிக்கும் தானியங்கி எச்சரிக்கை கருவி, மீட்புப் பயணத்தின்போது ஆக்சிஜன், சலைன், குளுக்கோஸ் செலுத்தும் வகையிலான கருவிகள், வசதியாக நகா்த்திக் கொள்ளும் கால் வைக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களும் இந்த பைக் ஆம்புலன்ஸில் இடம்பெற்றுள்ளன.

இந்த பைக் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக ரூ.35.49 லட்சத்தை சிஆா்பிஎஃப் ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT