இந்தியா

கரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மத்திய அரசு ஆலோசனை

DIN

புது தில்லி: கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல்வேறு நாடுகள் இந்திய அரசை அணுகியுள்ளன. அண்டை நாடுகளுக்கு முதலில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மத்திய சுகாதாரம், வா்த்தகம், வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள், மருந்து தயாரிப்பு துறை பிரதநிதிகள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை காணொலி வழியாக ஆலோசனை மேற்கொண்டனா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒட்டுமொத்த மனிதகுலமும் கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிா்கொள்வதற்கு இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத் திறன் உபயோகிக்கப்படும் என்று பிரதமா் மோடி தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

உள்நாட்டில் தடுப்பூசி தேவை, உற்பத்தித் திறன் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும், தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு எடுக்க சில காலம் ஆகும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவஸ்தவா சமீபத்தில் தெரிவித்திருந்தாா். இந்நிலையில் தடுப்பூசி ஏற்றுமதி குறித்த ஆலோசனை நடைபெற்ாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT