இந்தியா

உ.பி.: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனை ஊழியர் பலி

DIN

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 46 வயது ஊழியர், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்புக்கும், கரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மொராதாபாத் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவை கவனிக்கும் வார்டு பாயானா மஹிபால் சிங் ஞாயிற்றுக்கிழமை மாலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை பிற்பகலில் மஹிபால், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்குப் பிறகே மரணத்துக்கான காரணம் தெரிய வரும். ஆனால், இது கரோனா தடுப்பூசியால் ஏற்பட்டது அல்ல என்று தெரிகிறது. சனிக்கிழமை அவர் இரவுப் பணியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மொராதாபாத் சுகாதாரத் துறை தலைவர் எம்.சி. கார்க் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT