இந்தியா

குடியரசு தினத்தில் தில்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி

DIN

தில்லி: குடியரசு தினத்தில் தில்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாயிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளதால் அவர்களுடன் மத்திய அரசு இதுவரை ஒன்பது கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் எதுவும் இல்லை.

இந்நிலையில் குடியரசு தினத்தில் தில்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

ஞாயிறு மதியம் அவர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தங்களது டிராக்டர் பேரணிக்கு முன்னோட்டமாக கடந்த வாரத் துவக்கத்தில் அவர்கள் நடத்திய பேரணியினால் தில்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT