இந்தியா

தெலங்கானா: கரோனா பாதிப்பு 2.91லட்சமாக உயர்வு

DIN

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.91 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கி, வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இதனை, பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் இருந்தபடி காணொலி வழியாக தொடங்கி வைத்தாா். அதன் மூலம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவேக்ஸின்’, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ ஆகிய இரு தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த தடுப்பூசிகள் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என 3 கோடி பேருக்கு போடப்பட உள்ளது. முதல் நாளான சனிக்கிழமை, நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,006 மையங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளா்களுக்கு செலுத்தப்பட்டது. 

இந்நிலையில், தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,91,666-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 379 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 2,85,898 -ஆக அதிகரித்தது. 

கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,577-ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலம் முழுவதும் 4,191 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT