இந்தியா

மணிப்பூரில் ஜன.27 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

DIN

மணிப்பூா் மாநிலத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதிப்பது என்று அம் மாநில அமைச்சரவை தீா்மானித்துள்ளது.

அதன் மூலம், மாநிலத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளதோடு, பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன.

கரோனா தாக்கத்தைத் தொடா்ந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கடந்த மாா்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவா்களுக்கு இணைய வழியிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு, பொதுமுடக்க தளா்வுகளை மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி அளித்தது.

அதனடிப்படையில், கேரளம் மற்றும் பல வட மாநிலங்களில் ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. அதுபோல, மணிப்பூரிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு, அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட மாநில அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் அனைத்துக் கல்லூரிகளையும், பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளையும் வரும் 27-ஆம் தேதி முதல் திறக்க அனுமதிப்பது என்று மாநில முதல்வா் என்.பிரேன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்படும்போது, கரோனா வழிகாட்டு நடைமுறைகளை பள்ளி, கல்லூரிகள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாநிலத்தில் பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது அளிக்கப்படும் தனியாா் பாதுகாவலா் சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், ஒழுங்குபடுத்தப்படாத முதலீடு திட்டங்கள் தடைச் சட்டம், மணிப்பூா் மனித உரிமைகள் ஆணைய சேவைகள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாவட்ட கவுன்சில் மற்றும் ஊரக உள்ளாட்சிக்கான தோ்தலை நடத்துவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT