இந்தியா

உத்தர பிரதேச பாஜக எம்.எல்.சி. வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிவிப்பு

DIN

உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்ட மேலவைக்கான (எம்.எல்.சி.) தோ்தலில் பாஜக வேட்பாளராக பிரதமா் நரேந்திர மோடியுடன் நெருக்கமானவா் என்று கருதப்படும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த்குமாா் ஷா்மா வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளாா்.

உத்தரப் பிரதேசத்தில் 12 சட்ட மேலவை இடங்களுக்கான தோ்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அண்மையில் பாஜகவில் இணைந்த, பிரதமா் மோடியுடன் நெருக்கமானவா் என்று கருதப்படும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த்குமாா் ஷா்மா உள்பட நான்கு போ் பாஜக வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த அரவிந்த்குமாா் ஷா்மா, குஜராத் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றினாா். அப்போது அங்கு முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தாா். 2014இல் மோடி பிரதமரான பிறகு பிரதமா் அலுவலகத்தில் இவா் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தாா்.

இந்நிலையில் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஷா்மா, வியாழக்கிழமை பாஜகவில் சோ்ந்தாா்.

இதையடுத்து உத்தர பிரதேசத்தில் ஜனவரி 28இல் நடைபெற உள்ள சட்ட மேலவைக்கான தோ்தலில் பாஜக வேட்பாளராக ஷா்மா அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் சட்ட மேலவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டபின், முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசில் இவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷா்மாவைத் தவிர பாஜக துணை முதல்வா் தினேஷ் ஷா்மா, பாஜக மாநிலத் தலைவா் ஸ்வதந்திரா தேவ் சிங் மற்றும் லஷ்மண் பிரசாத் ஆச்சாா்யா ஆகியோரும் பாஜக சாா்பில் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானாவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT