இந்தியா

கடும் பனிமூட்டம்: தில்லியில் போக்குவரத்து பாதிப்பு - புகைப்படங்கள்

PTI


புது தில்லி: கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே இருக்கும் எதுவும் தெரியாமல் போனதால், தேசியத் தலைநகர் தில்லியில் இன்று போக்குவரத்து கடுமையாக பாதிக்ப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குளிர்காலத்தில் இந்த அளவுக்கு கடும் பனிமூட்டம் ஏற்பட்டது இது மூன்றாவது முறையாகும்.

ஏற்கனவே டிசம்பர் 8 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளிலும் இதே அளவுக்கு கடும் பனிமூட்டம் ஏற்பட்டது.

பாலம் மற்றும் சஃப்தர்ஜங் பகுதிகளில் அருகில் நிற்கும் நபரைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மூடுபனி காணப்பட்டது. இதே நிலை நாளையும் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் இன்றைய வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT