இந்தியா

கர்நாடகத்தில் டிரக்-டெம்போ மோதி கோர விபத்து: 11 பேர் பலி

15th Jan 2021 11:36 AM

ADVERTISEMENT


தர்வாத்: கர்நாடக மாநிலம் தர்வாத் அருகே இன்று காலை டிரக் - டெம்போ மோதிய கோர விபத்தில் 11 பேர் பலியாகினர்.

ஹுப்பள்ளி - தர்வாத் பைபாஸ் சாலையில் தர்வாத் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் டெம்போவில் வந்த 10 பெண்கள் மற்றும் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாவாங்கேர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவாவில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க டெம்போவில் சென்ற போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிரக் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT