இந்தியா

ஜேடிஎஸ் உடனான கூட்டணியே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்: சித்தராமையா

9th Jan 2021 09:22 PM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்ததே காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தொடர்ச்சியாக அவர் பதிவிட்ட சுட்டுரைப் பதிவுகளில் தெரிவித்ததாவது:

"மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அரசு அமைத்ததால், கர்நாடக காங்கிரஸுக்கு அனுகூலங்களைக் காட்டிலும் இழப்புகளே அதிகம். கூட்டணி அரசை அமைக்காமல் இருந்திருந்தால், நமது 14 எம்எல்ஏ-க்களை நாம் இழந்திருக்க மாட்டோம்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வலிமையான கட்சி. சமீபத்திய கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளே அதற்கு சாட்சி. அடுத்த பேரவைத் தேர்தல் முடிவுகளையும் இது குறிக்கிறது. இந்த உண்மை ஒருபோதும் மாறப்போவதில்லை."

ADVERTISEMENT

Tags : Siddaramaiah
ADVERTISEMENT
ADVERTISEMENT