இந்தியா

கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என நம்புகிறோம்: விவசாயிகள்

3rd Jan 2021 11:11 AM

ADVERTISEMENT

தில்லியில் கடும் குளிருக்கு மத்தியில் தொடர்ந்து போராடி வரும் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என்று நம்புவதாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 38-நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட 6 பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உடன்பாடு தெரிவிக்காததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனிடையே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்கும் என்று நம்புவதாக தில்லி காஸியாபாத் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர்கள் மேலும் பேசியதாவது, எங்கள் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து கடும் குளிருக்கு மத்தியில் சாலைகளில் நாங்கள் அமர்ந்து போராடி வருகிறோம். குளிரில் பலரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.

எனினும் போராட்டத்தை மனவுறுதியுடன் தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் என நம்புகிறோம் என்று கூறினர்.

Tags : Delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT