இந்தியா

கேரளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி, 44 பேர் காயம்

3rd Jan 2021 09:59 PM

ADVERTISEMENT


கேரள மாநிலம் காசர்கோட்டில் பேருந்து கவிழ்ந்து 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 70 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து காசர்கோட்டிலுள்ள பனத்தூர் நகரில் வீட்டின் மேல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் சஜித் பாபு தெரிவித்தது:

"காயமடைந்த 44 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் கன்ஹன்காட் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் மங்களூரு மற்றும் பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்." 

ADVERTISEMENT

இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நிகழ்ந்துள்ளது. பலியான அனைவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். 

விபத்தில் பலியானவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார்.
 

Tags : kerala
ADVERTISEMENT
ADVERTISEMENT