இந்தியா

தமிழைக் கற்காதது வருத்தம்: பிரதமர்

28th Feb 2021 03:19 PM

ADVERTISEMENT

தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழின் இலக்கியத்தரம் குறித்து ஏராளமானோர் தம்மிடம் புகழ்ந்துள்ளதாகவும் கூறினார்.

பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (பிப்.28) மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, இயற்கையை பாதுகாப்பதில் அசாம் மக்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அசாம் மாநிலத்திலுள்ள காஸிரங்கா பூங்காவில் 112 பறவையினங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

இதில் 58 பறவையினங்கள் கோடை காலத்தில் வெவ்வேறு நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன. அசாம் மாநிலத்தில் இயற்கையை காப்பதில் கோயில்களுக்கும் முக்கியப் பங்குள்ளது. 

பருவமழைக்கு முன்பாக நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 100 நாட்கள் நாம் அனைவரும் தண்ணீரை சேமிப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டும். 

பல்வேறு கலாசாரங்களையும், பண்பாட்டையும் கொண்டுள்ள மொழிகளை இந்தியா உள்ளடக்கியுள்ளது. உலகின் மிகப் பழமையான மொழியான தமிழைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. 

உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழின் இலக்கியத்தரம் குறித்து ஏராளமானோர் என்னிடம் புகழ்ந்து கூறியுள்ளனர்.

Tags : பிரதமர் Narendra Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT