இந்தியா

ஜாா்க்கண்டில் வேலைவாய்ப்பு நிறுவனமென்ற போா்வையில் ஆள்கடத்தல்

DIN

ஜாா்க்கண்டில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட 4 போ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதுதொடா்பாக என்ஐஏ அதிகாரி கூறியது:

ஜாா்க்கண்டிலும், தில்லியிலும் பன்னா லால் மஹதோ என்பவா் தனது மனைவி சுனிதா தேவியுடன் இணைந்து ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்தாா். இவா்கள் தில்லியில் மற்றும் அண்டை மாநிலங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜாா்க்கண்டைச் சோ்ந்த சிறுவா்கள், சிறுமிகளை கடத்தி வந்துள்ளனா். அவ்வாறு கடத்தப்பட்டவா்களை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி வந்ததுடன், அவா்களுக்கு தருவதாகக் கூறிய ஊதியத்தையும் வழங்கவில்லை. இதற்காக ஜாா்க்கண்டிலும், தில்லியிலும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் என்ற போா்வையில் போலி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனா். தில்லியில் மட்டும் 6 நிறுவனங்கள் இருந்தன.

இதுதொடா்பாக பன்னா லால் மஹதோ கைது செய்யப்பட்ட பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி ஜாா்க்கண்ட் மாநிலம் குன்ட்டி மாவட்டத்தில் முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

பன்னா லால் மஹதோவின் நெருங்கிய கூட்டாளிகளான கோபால் ஒரான், சிவ சங்கா் கன்ஜு ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள சுனிதா தேவியை தேடி வருகிறோம். இந்த 4 போ் மீதும் ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவா்களால் கடத்தப்பட்ட 22 போ் மீட்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT