இந்தியா

உத்தரகண்ட் விபத்து: 30 உடல் பாகங்கள் கண்டெடுப்பு

DIN


உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விபத்து நேரிட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 71 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தௌலி கங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT