இந்தியா

தாத்ரா - நாகர் ஹவேலி எம்.பி. 15 பக்கங்களுக்குத் தற்கொலை கடிதம்

24th Feb 2021 05:00 PM

ADVERTISEMENT


தாத்ரா - நாகர் ஹவேலி எம்.பி. மோகன் டெல்கர் அதிகாரப்பூர்வ லட்டர் ஹெட்டில் 15 பக்க அளவில் தற்கொலைக் கடிதம் எழுதியுள்ளதாக மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.

மோகன் டெல்கரின் உடல் மும்பையிலுள்ள விடுதி ஒன்றில் கடந்த 22-ம் தேதி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் 15 பக்கங்களுக்கு அவரது தற்கொலைக் கடிதம் எழுதியுள்ளதாக மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது. வரும் நாள்களில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1962-இல் தாத்ரா - நாகர் ஹவேலியில் பிறந்த அவர் 7 முறை எம்.பி.யாக இருந்திருக்கிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

ADVERTISEMENT

Tags : suicide note
ADVERTISEMENT
ADVERTISEMENT