இந்தியா

‘மீண்டும் பொதுமுடக்கத்திற்கு அவசியமில்லை’: கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்

20th Feb 2021 05:44 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான அவசியம் எழவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் சனிக்கிழமை தெரிவித்தார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையிலும் மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில எல்லைகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்த அவர் மீண்டும் பொதுமுடக்க்கத்தை அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் மாநில அரசிடன் இல்லை என விளக்கமளித்தார்.

ADVERTISEMENT

எனினும் மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியம் காட்டாமல் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT