இந்தியா

கேரளத்தில் இன்று புதிதாக 4,650 பேருக்கு கரோனா

20th Feb 2021 07:55 PM

ADVERTISEMENT

கேரளத்தில் இன்று புதிதாக 4,650 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரதில் 65,968 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 4,650 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10.30 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 13 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 58,606 பேர் சிகிக்சையில் உள்ளனர். அவர்களில் 8,989 பேர் தீவிர சிகிச்சையில் பிரிவில் உள்ளனர். 
2,47,780 வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 366 பகுதிகள் உள்ளன. கரோனாவிலிருந்து இன்று 5,841 பேர் குணமடைந்தனர். இதுவரை 9,67,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT