இந்தியா

மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையேல் மாற்றத்துக்கு தயாராகுங்கள்: மோடி எச்சரிக்கை

7th Dec 2021 01:48 PM

ADVERTISEMENT


புது தில்லி: நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் வருகைப்பதிவு குறைவாக இருக்கும் விவகாரம் குறித்து எச்சரித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையேல் காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.

இந்த கூட்டம் குறித்து தகவல்களை வெளியிட்ட நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முதல் முறையாக, இந்தக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அவரவர் தொகுதிகளில் விளையாட்டு போட்டிகளை நடத்துமாறு மோடி வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே.. இதுதான் ஒமைக்ரானின் புதிய அவதாரமோ?

ADVERTISEMENT

வருகைப் பதிவு குறித்த விவகாரம் பற்றி பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்களில், அனைத்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டும். குழந்தைகளிடம் ஒரு செயலை செய்ய வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினால், அவர்கள் கூட அந்தச் செயலை மீண்டும் செய்வதில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் தாங்களாகவே மாறுங்கள், இல்லையேல், காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள் என்றும் மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களின் வருகைப் பதிவு மோசமாக இருப்பது குறித்து ஏற்கனவே பல முறை மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளது நினைவில்கொள்ளத்தக்கது.
 

Tags : pm modi Parliament bjp mp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT