இந்தியா

நெருங்கும் தேர்தல்: உத்தரகண்டுக்கு ரூ.18,000 கோடி நலத்திட்டங்கள்: மோடி அறிவிப்பு

4th Dec 2021 04:29 PM

ADVERTISEMENT


டேஹ்ராடூன்: விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.18,000 கோடியில் மாநில மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் பிரசாரத்தைத் தொடக்கி வைக்கும் விதமாக பரேடு மைதானத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்கலாமே.. தீபாவளி காரணமா? அக்டோபரில் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிய இந்தியர்கள்

இந்த நிகழ்ச்சியின்போது, உத்தரகண்டில், 15,728 கோடி ரூபாய் மதிப்பிலான 11 நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், 2,573 கோடி மதிப்பிலான 7 நலத்திட்ட உதவிகளைத் தொடக்கி வைத்தும் உரையாற்றினார்.

ADVERTISEMENT

இதில், தில்லி - டேஹ்ராடூன் எக்ஸ்பிரஸ்வே சாலை, இவ்விரு நகரங்களுக்கு இடையேயான தற்போதைய தூரமான 248ஐ, 180 ஆகக் குறைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : உத்தரகண்ட் டேஹ்ராடூன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT