இந்தியா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் உத்தவ் தாக்கரே

2nd Dec 2021 12:38 PM

ADVERTISEMENT


மும்பை: முதுகெலும்பில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார்.

மும்பையில், உத்தவ் தாக்கரே சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே.. இறந்தவர்கள்கூட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் அதிசயம்?

நவம்பர் 11ஆம் தேதி கழுத்து வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவுக்கு 12ஆம் தேதி முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  அவர் தனது பணி காரணமாக, கழுத்து வலியை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில், அது தீவிரமடைந்து அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

 

தற்போது அவர் நல்ல குணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
 

Tags : உத்தவ் தாக்கரே Uddhav Thackeray
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT