இந்தியா

உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்: தில்லியில் நாளைமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை

2nd Dec 2021 01:23 PM

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தை தொடர்ந்து தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளைமுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொழிற்சாலைகள், வாகனங்களால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான காற்று மாசு நிலவி வருகின்றது. இதையடுத்து, தில்லி மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலக பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் இந்த வாரம் திறக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காற்று மாசு குறித்த வழக்கி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “வேலைக்கு செல்பவர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலில் குழந்தைகளுக்கு பள்ளியை திறந்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தில்லி காற்று மாசு: மத்திய, மாநில அரசுகளுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

மேலும், 24 மணிநேரத்தில் முறையான  நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் நாளை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Tags : Delhi School Holiday Air Pollution
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT