இந்தியா

எம்.பி.க்கள் இடைநீக்கம்: 2வது நாளாக எதிர்க்கட்சிகள் போராட்டம்

1st Dec 2021 10:59 AM

ADVERTISEMENT

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29இல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 26 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து இரண்டாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : MP Suspension Winter Session Parliament
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT