இந்தியா

தால் ஏரியில் மிதக்கும் ஏடிஎம்..அசத்தும் எஸ்பிஐ

22nd Aug 2021 12:55 PM

ADVERTISEMENT

நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிதக்கும் ஏடிஎம் வசதியை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா, இந்த ஏடிஎம் வசதியை தொடங்கி வைத்தார்.

இது ஸ்ரீநகருக்கு மேலும் அழகு சேர்க்கும் என எஸ்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரின் வசதிக்கு ஏற்ப ஸ்ரீநகர் தால் ஏரியில் உள்ள படகில் ஏடிஎம் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் ஏடிஎம்-இன் மூலம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளது.

தால் ஏரியில் மதிக்கும் காய்கறி சந்தை, தபால் நிலையம் ஆகியவையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கசென்னையின் முக்கிய இடங்கள்! அன்றும்...இன்றும்...

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT