இந்தியா

ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளை பெறும்: மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்

22nd Aug 2021 08:28 PM

ADVERTISEMENT

 

வட இந்தியாவின் கல்வி மையமாக, ஜம்மு வேகமாக உருவாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீடு மற்றும் ஈடுபாடு, ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லடாக் ஆகியவற்றுக்கு அவர் அளித்த அதிக முன்னுரிமையால் இது சாத்தியமாகியுள்ளது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர்(தனிப்பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். 

ஜம்மு ஐஐஎம் (இந்திய மேலாண்மை கழகம்)  5 ஆவது ஆண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசினார். 

அப்போது, குறுகிய காலத்தில், அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பாதிப்புக்கு இடையிலும், இந்த கல்வி மையம் மிக குறுகிய காலத்தில் முத்திரை பதித்துள்ளது.  ஜம்மு, காஷ்மீர் கல்வித்துறையில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக ஜம்மு ஐஐஎம் உள்ளது என்றும், அது அனைத்து தரப்பினருக்கும் பயனளித்து வருகிறது.

ADVERTISEMENT

ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு கல்விப் பெற எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

ஜம்முவால் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், எய்ம்ஸ், தேசிய உயர்கல்வி நிறுவனம், கதுவாவில் உள்ள தொழிற்துறை பயோடெக் பூங்கா, ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தில் முதல் விண்வெளி மையம், இந்தியாவிலுள்ள முதன்மையான நிறுவனங்கள் போன்றவற்றை ஜம்முவால் பெருமைப்படுத்தப்படுகிறது என்றார்.  

மேலும், இன்று ஜம்முவில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள், ரூசா நிதியுதவி பெற்ற பொறியியல் கல்லூரிகள், ஆயுர்வேதக் கல்லூரி, வரவிருக்கும் ஹோமியோபதி கல்லூரி மற்றும் ஜம்மு மாகாணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய நிதியுதவி பெற்ற நிறுவனங்கள் சாத்தியமாகி உள்ளது.

ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு மிகப்பெரிய தொழில் முதலீடுகளை காணும், குறிப்பாக சுகாதாரத்துறையில் அதிக முதலீடு செய்யப்படும். இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், ஐஐஎம் மாணவர்களுக்கும் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனாலும், நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், புத்தாக்க தொடக்க நிறுவன முயற்சிகள் மூலம், வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்ற உறுதியான மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும், இது உலகில் எங்கும் சாத்தியமில்லை அல்லது விரும்பத்தக்கதும் அல்ல என்று கூறினார்.

மேலும், ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால், கல்வி வளர்ச்சியில் இருந்த தடைகள் நீக்கப்பட்டதால், இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற ஜம்முவுக்கு வரத் தயாராக உள்ளனர். புதிய ஒழுங்கு முறை சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் முன்பு இருந்த அச்சங்கள் இப்போது போய்விட்டன.

கடந்த 2016 ஆம் ஆண்டு 54 மாணவர்களுடன் தொடங்கிய ஜம்மு ஐஐஎம்-இல், இன்று 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், சர்வதேச கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் 6 துணை பேராசிரியர்கள் உள்பட 30 சிறந்த பேராசிரியர்கள் உள்ளனர்.  2022 ஆம் ஆண்டுக்குள், ஜகதி என்ற இடத்தில், உங்களுக்கு இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு இணையாக அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அழகான வளாகம் கிடைக்கவுள்ளது. அதற்காக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டுக்கள் என்று ஜித்தேந்திர சிங் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT