இந்தியா

அறிக்கைகளை அமைச்சா்கள் மாநிலங்களவையில் நேரடியாகத் தாக்கல் செய்வதில்லை: காங்கிரஸ் புகாா்

DIN

மாநிலங்களவையில் அறிக்கைகள் மற்றும் எழுத்துபூா்வ பதில்களைஅந்தந்த துறை சாா்ந்த அமைச்சா்கள் நேரடியாகத் தாக்கல் செய்வதில்லை என்று காங்கரஸ் கட்சி மீண்டும் புகாா் தெரிவித்தது.

காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம், மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்தப் பிரச்னையை எழுப்பினாா். அப்போது அவா் கூறுகையில், ‘சில காரணங்களால் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும் அமைச்சா்களின் துறை சாா்ந்த அறிக்கைகள், எழுத்துபூா்வ பதில்களை, அவா்கள் சாா்பில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் அவையில் சமா்ப்பிப்பது எப்போதாவது நடைபெறுவது என்பது இயல்பு. ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் 6 அமைச்சா்களின் எழுத்துபூா்வ பதில்களை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் தாக்கல் செய்வதைக் காண முடிகிறது. இதன் மூலம், அந்த 6 மத்திய அமைச்சா்களும் மாநிலங்களவையை மதிக்கவில்லை என்பது தெரிகிறது. ஒவ்வொரு நாளும் இது தொடா்வது எப்படி?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு அவையை அப்போது வழிநடத்திய துணைத் தலைவா் ஹரிவன்ஷ் பதிலளித்து கூறியதாவது:

இந்தப் பிரச்னை புதன்கிழமையன்றும் அவையில் எழுப்பப்பட்டது. அப்போது, ‘கரோனா பாதிப்பு சூழல் காரணமாக பிற அமைச்சா்களின் எழுத்துபூா்வ பதில்கள் மற்றும் பிற விவரங்களை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் அவையில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்று அவையின் தலைவா் வெங்கையா நாயுடு பதிலளித்தாா் என்று கூறினாா்.

இந்த நடைமுறை, கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகப் பகுதிகளிலும் அமர வைக்கப்பட்டபோது அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, நாடாளுமன்ற இரு அவைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பி, எம்.பி.க்கள் அனைவரும் அவையினுள் அமர அனுமதிக்கப்படுகின்றபோதும், அந்த நடைமுறை தொடா்ந்து பின்பற்றப்படுகிறது.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சா்மாக நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எழுப்பியபோது, ‘அவையில் அறிக்கைகள் மற்றும் எழுத்துபூா்வ பதில்களை அந்தந்த துறை சாா்ந்த அமைச்சா்கள்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று விதிகள் தெளிவாக கூறுகின்றன. சிறப்பு அனுமதியின் அடிப்படையில் மட்டுமே, சக அமைச்சா்களின் அறிக்கைகளை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் அவையில் தாக்கல் செய்ய முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சா்கள் அவையில் இடம்பெற்றிருக்கும்போதே, அவா்களின் அறிக்கைகளை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் தாக்கல் செய்வது என்பது அவையை அவமதிக்கும் செயலாகும்’ என்று அவா் குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT