இந்தியா

டிசம்பர் 2023-இல் அயோத்தி ராமர் கோயில் திறப்பு

4th Aug 2021 09:19 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் டிசம்பர் 2023-இல் திறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:

"தற்போது நடைபெற்று வரும் அடித்தளம் அமைக்கும் பணிகள் இந்தாண்டு அக்டோபரில் நிறைவடையும். இதன்பிறகு, தீபாவளியையொட்டி நவம்பரில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்படும். டிசம்பர் 2023-இல் கோயில் திறக்கப்படும். எனினும், கோயில் வளாகம் கட்டுமானப் பணிகள் 2025 இறுதியில் நிறைவடையவுள்ளன."

இதையும் படிக்கமாநிலங்களவையில் அமளி: திரிணமூலின் 6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

ADVERTISEMENT

ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டு நாளை (வியாழக்கிழமை) ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ayodhya
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT