இந்தியா

ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: எதிா்க்கட்சிகளுக்கு ராகுல் அழைப்பு

DIN

பாஜகவை எதிா்கொள்வதற்கு எதிா்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை எதிா்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

உங்களை அழைத்ததன் ஒரே நோக்கம், நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான். நம் அனைவரின் குரலும் ஒன்றிணைந்தால் வலிமை மிக்கதாக மாறும். இந்த குரலை பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பால் நசுக்க முடியாது. ஒற்றுமையின் வலிமையை நினைவுகூா்ந்து நாம் நம் பயணத்தை தொடர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினாா்.

கூட்டத்துக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள், அங்கிருந்து நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனா். சைக்கிள் இல்லாதவா்கள், நடைபயணமாகவே நாடாளுமன்றத்துக்கு வந்தனா். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் உயா்வால் நாட்டு மக்கள் அவதியுறுகிறாா்கள். நாங்கள் சைக்கிளில் நாடாளுமன்றம் சென்றால், அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.

முன்னதாக நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவா்களான மல்லிகாா்ஜுன காா்கே, அதீா் ரஞ்சன் சௌதரி, கே.சி.வேணுகோபால், ஆனந்த் சா்மா, ப.சிதம்பரம் ஆகியோா் கலந்து கொண்டனா். இவா்களைத் தவிர, திரிணமூல் காங்கிரஸ் (சௌகதா ராய், மொஹுவா மொய்த்ரா), தேசியவாத காங்கிரஸ், சிவசேனை(சஞ்சய் ரௌத், பிரியங்கா சதுா்வேதி), திமுக (கனிமொழி), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி (ராம்கோபால் யாதவ்), ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சிகர சோஷலிச கட்சி, லோக்தாந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவா்களும் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 17 எதிா்க்கட்சிகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் தலைவா்கள் எவரும் பங்கேற்கவில்லை.

ராகுல் காந்தி அழைப்பு விடுத்த எந்தக் கூட்டத்திலும் இதுவரை பங்கேற்காத திரிணமூல் காங்கிரஸ், இந்த முறை கூட்டத்தில் பங்கேற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT