இந்தியா

மாணவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்: பிரதமர்

DIN


சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமது சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற எனது இளம் நண்பர்களுக்கு வாழ்த்துகள். 

மாணவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பானதாக அமைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை,  பருவத் தேர்வுகளின் அடிப்படையில் கணக்கீடப்பட்டு www.cbse.nic.in, www.cbseresults.nic.in  ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT