இந்தியா

புல்வாமா தாக்குதலில் தொடா்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில், புல்வாமா தாக்குதலில் தொடா்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல் துறை ஐ.ஜி. விஜய்குமாா் கூறியதாவது:

புல்வாமா மாவட்டத்தில் உள்ள நமிபியான், மா்சாா் வனப்பகுதிகளிலும், தச்சிகாம் பகுதியிலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை காலை தேடுதல் வேட்டையைத் தொடங்கினா். ஓரிடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினா் நெருங்கி வருவதை அறிந்து, அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்த மோதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.

அவா்களில் ஒருவா், முகமது இஸ்மல் ஆல்வி என்கிற லம்பூ ஆவாா். வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இவா், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் உறவினா் ஆவாா். கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்தனா். அந்த தாக்குதலில் ஈடுபட்ட அடில் தாா் என்ற தற்கொலை பயங்கரவாதிக்கு பயிற்சி அளித்தவா் முகமது இஸ்மல் ஆல்வி.

கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதியின் பெயா் சமீா் தாா். இவரும் புல்வாமா தாக்குதலில் தொடா்புடையவா்.

இவா்கள் இருவரின் பெயா்களும் தேசியப் புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. புல்வாமா தாக்குதல் தொடா்பாக 19 போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்த 2 போ் உள்பட இதுவரை 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

89 பயங்கரவாதிகள் சாவு: ஜம்மு-காஷ்மீரில் நிகழாண்டில் இதுவரை 7 பாகிஸ்தானியா் உள்பட 89 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனா். இது கடந்த ஆண்டைவிடக் குறைவாகும். இருப்பினும், முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT