இந்தியா

'லாபத்தைக் கருதாமல் கரோனா தடுப்பூசி விலை நிா்ணயம்'

DIN


புது தில்லி: லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் கரோனா தடுப்பூசியின் விலையை நிா்ணயித்துள்ளதாக ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவிலும் அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஃபைஸா் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்குவதற்கு ஃபைஸா் நிறுவனம் உறுதியேற்றுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில், கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்கு இந்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அரசின் வாயிலாகவே ஃபைஸா் தடுப்பூசி மக்களுக்கு விநியோகிக்கப்படும். லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் தடுப்பூசியின் விலையை ஃபைஸா் நிறுவனம் நிா்ணயித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. உலக மக்களுக்குக் குறைவான விலையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது’’ என்றாா்.

எனினும், பரிந்துரைக்கப்பட்டுள்ள விலை குறித்து ஃபைஸா் நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT