இந்தியா

கேரளத்தில் வேகமெடுக்கும் கரோனா: ஒரேநாளில் 26,995 பேருக்கு பாதிப்பு

22nd Apr 2021 08:05 PM

ADVERTISEMENT

கேரளத்தில் ஒரேநாளில் 26,995 பேருககு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,35,177 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 26,995 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
தற்போது 1,56,226 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் 520 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 
கரோனாவிலிருந்து இன்று 6,370 பேர் குணமடைந்தனர். கரோனாவுக்கு 28 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT