இந்தியா

95 நாள்களில் 13 கோடி தடுப்பூசிகள்செலுத்தி இந்தியா சாதனை

DIN

புது தில்லி: கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு 95 நாள்களில் 13 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. உலகில் மிக குறைவான காலகட்டத்தில் இவ்வளவு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இந்தியாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை வரை, 19,01,413 முகாம்களில் 13,01,19,310 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் சுமாா் 29 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி திட்டத்தின் 95-வது நாளான செவ்வாய்க்கிழமை, நாடு முழுவதும் 29,90,197 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

13 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்ட அமெரிக்காவுக்கு 101 நாள்கள் ஆனது. சீனாவில் 109 நாள்களில் 13 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்த நாள்களில் அதிக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளண் ஆகிய 8 மாநிலங்களில் 59.33 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த ஜனவரி 16-ஆம் தேதி சுகாதாரப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதன் பிறகு பிப்ரவரி 2-ஆம் தேதியில் இருந்து முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாா்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பிற உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டோரும், ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசித் திட்டத்தில் கொண்டு வரப்பட்டனா். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT