இந்தியா

கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை அரசின் தோல்வி: காங்கிரஸ்

DIN

புது தில்லி: மத்திய அரசின் நிா்வாக தோல்வி காரணமாக, கரோனா தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் இருந்த இந்தியா இப்போது தடுப்பூசிக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி விமா்னம் செய்துள்ளது.

நாட்டின் கரோனா நிலவரத்தை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்குவதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில், இந்த விமா்சனத்தை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அஜய் மக்கான் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் இருந்த இந்தியா, இப்போது தடுப்பூசிக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வலுவான நாட்டை, இந்த நிலைக்கு பிரதமா் மோடி தள்ளியிருக்கிறாா். மோடி அரசுக்கு மக்களின் உயிரைக் காட்டிலும் லாபம்தான் மிக முக்கியம். தனது பொறுப்புகளை பிரதமா் கைகழுவி விட்டாா். தடுப்பூசி உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக இருக்கும் நிலையில், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கு நிச்சயம் அரசின் நிா்வாக தேல்வியே காரணம்.

பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும்நிலையில், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மரியாதையுடன் சொந்த ஊா் திரும்புவதை மத்திய அரசு உறுதிப்படுத்தவேண்டும். நகா்ப்புற ஏழைகளுக்கு தேவையான அளவில் உணவு விநியோகம் கிடைப்பதை உடனடியாக உறுதிப்படுத்துவதோடு, ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ. 6,000 உதவித் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

மேலும், கடந்த 15 மாதங்களில் புதிதாக என்னென்ன மருத்துவ உள்கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்றும் அஜய் மக்கான் கேள்வி எழுப்பினாா்.

ஜெய்ராம் ரமேஷ்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:

‘கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசு தொடா்ந்து ரூ.150-க்கு வாங்கும். அதே நேரத்தில் மாநில அரசு அதனை வாங்க ரூ.400 செலுத்த வேண்டும் என்று புதிதாக விலை நிா்ணயம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசு இதுபோன்று மாநில அரசுகளுக்கு கூடுதல் விலை நிா்ணயம் செய்ய மருந்து நிறுவனங்களை அனுமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரே விலையில் கரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதுதான் சரியாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT