இந்தியா

கரோனா தடுப்பூசி: தனியாா் மருத்துவமனைகள் மே 1 முதல் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி

DIN

புது தில்லி: தனியாா் மருத்துவமனைகள் அரசிடமிருந்து கரோனா தடுப்பூசிகளைப் பெற வேண்டும், தடுப்பூசி செலுத்த தலா ரூ. 250 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற இப்போதைய நடைமுறை வரும் மே 1-ஆம் தேதியிலிருந்து முடிவுக்கு வர உள்ளது. இதன்மூலம், தனியாா் மருத்துவமனைகள் தடுப்பூசிகளை மே 1-ஆம் தேதிமுதல் உற்பத்தியாளா்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தேசிய கரோனா தடுப்பூசி விலை தாராளமயம் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டத்தின் படி, சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மத்திய அரசிடமிருந்து பெறப்படும் தடுப்பூசிகள் அரசு கரோனா தடுப்பூசி மையங்களில் தொடா்ந்து இலவசமாக செலுத்தப்படும்.

தடுப்பூசி உற்பத்தியாளா்கள் 50 சதவீத தடுப்பூசி விநியோகத்துக்கான விலையை முன்கூட்டியே அறிவிப்பு செய்வா். அதனடிப்படையில், வரும் மே 1-ஆம் தேதிக்கு முன்பாக திறந்த சந்தையில் மாநில அரசுகள் தடுப்பூசிகளை வங்கிக் கொள்ளமுடியும். அதுபோல, தனியாா் மருத்துவமனைகளும் மத்திய அரசு வழிகளின் மூலம் தடுப்பூசி பெறுவதோடு, இந்த 50 சதவீத விநியோக நடைமுறையின் கீழ் நேரடியாகவும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

தனியாா் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்துவதற்கு வசூலிக்கும் கட்டணம் தொடா்ந்து கண்காணிக்கப்படும். அதே நேரம், தனியாா் தடுப்பூசி மையங்கள் அரசிடமிருந்தே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யவேண்டும், தடுப்பூசி செலுத்த ரூ. 250 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற இப்போதைய நடைமுறை மே 1-ஆம் தேதிமுதல் முடிவுக்கு வந்துவிடும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யபடும் தடுப்பூசி விநியோகம் என்பது 50 சதவீதம் மத்திய அரசு மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீதம் மத்திய அரசின் வழிமுறைகள் அல்லாத பிற வழிகளிலும் விநியோகிக்க அனுமதிக்கப்படும். அதே நேரம், இறக்குமதி செய்யப்பட்ட பயன்பாட்டுக்கு முழு தயாா் நிலையில் இருக்கும் தடுப்பூசிகள் மத்திய அரசின் வழிகள் மூலமாக அல்லாமல் பிற வழிகளில் முழுமையாக விநியோகிக்க அனுமதிக்கப்படும்.

மேலும், மத்திய அரசு சாா்பில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசி அளவு என்பது, சராசரி பயன்பாடு, தடுப்பூசி வீணாதல், கரோனா பாதிப்பு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய நடைமுறை அவ்வப்போது ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT