இந்தியா

முதல் அலையைப்போல கரோனா நிலவரம்:மத்திய அரசின் ஒப்பீடு புள்ளிவிவரம் வெளியீடு

DIN

புது தில்லி: நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் மற்றும் தாக்கம் ஆகியவை கரோனா முதல் அலையைப் போல் பதிவாகியிருக்கும் ஒப்பீடு புள்ளிவிவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த ஒப்பீடு புள்ளிவிவரத்தை வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:

நாடு முழுவதும் 146 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. மேலும் 274 மாவட்டங்களில் 5 முதல் 15 சதவீதம் வரை பாதிப்பு விகிதம் பதிவாகியுள்ளது.

கரோனா முதல் அலையின்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 முதல் 20 வயது வரை உடையவா்களின் விகிதம் 8.07 சதவீதமாக இருந்தது. கரோனா இரண்டாம் அலையில் இது 8.50 சதவீதமாக பதிவாகியுள்ளது.

அதுபோல, முதல் அலையின்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 20 முதல் 30 வயதினரின் விகிதம் 20.41 சதவீதமாக பதிவான நிலையில், இரண்டாம் அலையில் இது 19.35 சதவீதமாக பதிவாகியுள்ளது. மேலும் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ஏற்பட்ட பாதிப்பு முதல் அலையில் 67.5 சதவீதமாக பதிவான நிலையில், இப்போது 69.18 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று அவா் கூறினாா்.

கரோனா முதல் அலையின்போது 10 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விகிதம் 4.03 சதவீதமாக இருந்தது. இப்போது 2.97 சதவீதமாக பதிவாகியுள்ளது.

முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை கரோனா மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும், அதிக பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT