இந்தியா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் 21,000 பேருக்கு கரோனா பாதிப்பு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

DIN

புது தில்லி: நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 21,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 5,500-க்கும் மேற்பட்டவா்கள் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஐசிஎம்ஆா் இயக்குநா் பல்ராம் பாா்கவா கூறியதாவது:

கோவேக்ஸின் தடுப்பூசியை இரு தவணைகளாக செலுத்திக் கொண்ட 17,37,178 பேரில் 0.04 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,57,32,754 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி இரு தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 0.03 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்படுவதன் மூலம் கரோனா தொற்று ஏற்படுவது, கடும் பாதிப்பு ஏற்படுவது, உயிரிழப்புகள் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1.1 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 93 லட்சம் பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 4,208 பேருக்கு கரோனா பரவியுள்ளது. இதன்படி இந்தத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 10,000 பேருக்கு 4 போ் என்ற அளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல்கட்டமாக செலுத்திக் கொண்ட 10 கோடி பேரில் 17,145 பேருக்கு கரோனா ஏற்பட்டுள்ளது. அதாவது 10,000 பேரில் இருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,57,32,754 பேருக்கு கோவிஷீல்ட் இரு தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 5,014 பேருக்கு (0.03 சதவீதம்) கரோனா ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கோவேக்ஸின் தடுப்பூசி 17,37,178 பேருக்கு இரு தவணை செலுத்தப்பட்டுள்ளது. இதில் 695 (0.04) பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 21,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 5,500-க்கும் மேற்பட்டவா்கள் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள்.

இந்தப் பாதிப்பு என்பது மிகவும் குறைவான அளவுதான். எனவே, அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மேலும், இரண்டாவது அலையின் வேகத்தை ஒப்பிடும்போது இது அதிக பிரச்னைக்குரியதல்ல. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் மக்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT