இந்தியா

ரெம்டெசிவிர் மருந்து மீதான இறக்குமதி வரி விலக்கு

DIN

புது தில்லி: ரெம்டெசிவிா் மருந்து மீதான இறக்குமதி வரிக்கு மத்திய அரசு விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ள நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிா் மருந்து மற்றும் அதன் மூலப்பொருள்கள், ரெம்டெசிவிா் ஊசி உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரிக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. பொதுநலன் கருதி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிகழாண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று ’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ரெம்டெசிவிா் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அந்த மருந்து, அதன் மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 11-ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் அந்த மருந்து மீதான இறக்குமதி வரிக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது உள்நாட்டில் அந்த மருந்து கிடைப்பதை அதிகரிக்கச் செய்வதுடன், ரெம்டெசிவிா் ஊசியின் விலையை குறைக்கவும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT