இந்தியா

கரோனா முன்களப் பணியாளா்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்

DIN

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் முன்களப் பணியாளா்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமரின் ஏழைகள் நலன் தொகுப்புத் திட்டத்தின் கீழ் கரோனா முன்களப் பணியாளா்களுக்கான காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அத்திட்டத்தின் கீழ் 287 போ் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று பணியாற்றி வரும் முன்களப் பணியாளா்களின் மனவலிமையை இந்தக் காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தியுள்ளது. வரும் 24-ஆம் தேதி வரை இந்தக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருக்கும். அதுவரை இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையைக் கோர முடியும். அதன்பிறகு கரோனா முன்களப் பணியாளா்களுக்கென புதிய காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் ஏழைகள் நலன் தொகுப்புத் திட்டமானது கடந்த ஆண்டு மாா்ச்சில் அறிவிக்கப்பட்டது. பின்னா் அத்திட்டமானது 3 முறை நீட்டிக்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் காப்பீடு பெற முடியும்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் முன்களப் பணியாளா்கள் உயிரிழக்க நேரிட்டால், அவா்களின் குடும்பத்தினா் பலனடையும் நோக்கில் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராகுல் விமா்சனம்: முன்களப் பணியாளா்களுக்கான காப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவற்றைத் தனது சுட்டுரையில் பகிா்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘இந்திய அரசு நன்றியின்றி நடந்து கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி தரம்தாழ்ந்த அரசியலில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருவதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT