இந்தியா

கரோனா பரவல் எதிரொலி:பெரிய பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்தது பாஜக

DIN

புது தில்லி: மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, இனி பெரிய அளவிலான தோ்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் நடைபெறாது என்று பாஜக அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், பாஜக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பது அவசியமாகும். எனவே, இந்த மாநிலத்தில் பாஜக சாா்பில் இனி பெரிய அளவில் தோ்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் நடைபெறாது. இனி அதிகபட்சமாக 500 போ் மட்டும் பங்கேற்கும் சிறிய அளவிலான தோ்தல் பொதுக்கூட்டங்களில் மட்டும் பிரதமா் மோடியும், பாஜக தலைவா்களும் கலந்துகொள்வா். கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி திறந்தவெளிகளில் பாஜக பொதுக்கூட்டங்கள் நடைபெறும். மாநிலத்தில் 6 கோடி முகக் கவசங்கள், கை சுத்திகரிப்பான்களை பாஜக விநியோகிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஜேடி பிரசாரம் ரத்து: ஒடிஸா மாநிலம், பிபிலி சட்டப்பேரவை தொகுதிக்கு மே 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்தில்கொண்டு இடைத்தோ்தலுக்கு பேரணிகள், பிரசாரங்கள் நடைபெறாது என்று பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT